புதிய நிறத்தில் உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் விற்பனை விவரம் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2 கோ கிரீன் வுட்ஸ் நிற மாடல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. முன்னதாக ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் புளூ ஹேஸ் மற்றும் கிரே சியெரா நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
பின் நார்டு 2 புதிய நிறம் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. அந்த வகையில் இந்த மாடல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 50 எம்பி பிரைமரி கேமரா, 32 எம்பி செல்பி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு 2 கோ கிரீன் வுட்ஸ் நிற மாடல் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 27,999 என்றும், 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல்கள் விலை முறையே ரூ. 29,999 மற்றும் ரூ. 34,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.