ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமை சட்ட விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக, வாட்சப் நிறுவனத்திற்கு, 225 மில்லியன் யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1950 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் இந்த அபராதத்தை விதித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வந்த ஆணையம், கடந்த டிசம்பர் மாதம் அறிக்கை சமர்பித்து இருந்தது. அதில் 50 மில்லியன் யூரோக்கள் வரை அபராதம் விதிக்க முன்மொழிந்து இருந்தது.
ஆனால் மற்ற ரெகுலேட்டர்கள் அபராதத்தை உயர்த்த வலியுறுத்தியதை அடுத்து அபராத தொகை 225 மில்லியன் யூரோக்களாக உயர்த்தப்பட்டது. இதேவேளை இதற்கு முன் இந்த அளவு அதிக அபராதம் எந்த நிறுவனத்திற்கும் விதிக்கப்படவில்லை என்று தரவு பாதுகாப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இது முற்றிலும் தவறான நடவடிக்கை என்று தெரிவித்துள்ள வாட்சப் நிறுவனம், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.