பரிசில் விஷ வாயு தாக்கி 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன் தினம் பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.
Rue Bichat வீதியில் உள்ள அலுவலகம் ஒன்றில் திடீரென carbon monoxide வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதன்போது கட்டிடத்தின் தரை தளத்தில் திடீரென பரவிய இந்த வாயுவினால், அங்கு பணி புரிந்த 40 பேர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகினர்.
இதனையடுத்து உடனடியாக உதவிக்குழு அழைக்கப்பட்டது. 50 தீயணைப்பு படையினர் இணைந்து, 15 வாகனங்களில் மூச்சுத்திணறலுக்கு உள்ளானவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்களில் 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மூவர் மிக மோசமான உடல்நலத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.