பிரான்ஸின் ஐபல் கோபுரத்திலிருந்து 600 மீற்றர் தூரம் கயிற்றில் கடந்த வீரரின் சாகசம் மக்களைக் கவர்ந்துள்ளது.
நேதன் பாவ்லின் என்ற 27 வயது ஆடவர் 70 மீற்றர் உயரத்தில், கயிற்றில் நடந்தது மட்டுமல்ல, பல்வேறு சாகசங்களும் புரிந்தார். ஐபல் கோபுரத்திலிருந்து, சீன் ஆற்றின் மறுபக்கத்தில் உள்ள கலை அரங்கக் கட்டடத்திற்கு அவர் கயிற்றில் நடந்து சென்றார்.
பிரான்ஸ் தேசிய மரபுடைமை நாளையொட்டி அந்தச் சாகசத்தில் அவர் ஈடுபட்டார்.
4 ஆண்டுப் பயிற்சிக்கு பின்னரே வெற்றிகரமாக சாகசம் செய்யமுடிந்ததாக நேதன் பாவ்லின் குறிப்பிட்டார்.
எனினும் நேதன் பாவ்லினின் இந்தச் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னர் அவரே கடந்த 2017 ஆம் ஆண்டு இதேபோன்று நடந்து சென்று சாகசம் புரிந்தமை குறிப்பிடத்தக்கது.