பெற்றோர்கள், 12 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான தமது பிள்ளைகளை தடுப்பூசி செலுத்த வழிநடத்த வேண்டாம் என இலங்கையின் சுகாதார அமைச்சகம் இன்று கோரியுள்ளது.
12 முதல் 19 வயதுக்குட்பட்ட நோய் மற்றும் குறைபாடுகள் உள்ள பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்ற நிலையில், ஆரோக்கியமான பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகளின் துணை இயக்குனர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) கூறியுள்ளார்.
12-19 வயதிற்குட்பட்ட நோய்த்தொற்றுகள் மற்றும் குறைபாடுகள் உள்ள பிள்ளைகளுக்கு சிறிய எதிர் விளைவை விட தடுப்பூசிகளின் அதிக நன்மையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஆரோக்கியமான பிள்ளைகளுக்கான தடுப்பூசிகளை கொடுக்க முடிவு செய்யும் போது, கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.அதனால் தான் இது குறித்து நிபுணர்கள் தங்கள் பரிந்துரைகளை இன்னும் முன்வைக்கவில்லை.
எனவே, ஆரோக்கியமான பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு தடுப்பூசி மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று ஹேரத் கேட்டுள்ளார்.
சரியான நேரத்தில் ஆரோக்கியமான பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து நிபுணர்கள் பொருத்தமான பரிந்துரைகளை வெளியிடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.