அபயராமய விகாரை – தேசிய சொத்துக்களை பாதுகாப்பதே எமது நோக்கம்.ஒவ்வொரு நாடுகளுக்கு அவசியமான வகையில் பிரித்து வழங்குவதை நாம் அனுமதிக்கமாட்டோம்.அதனால் பொருளாதாரமும் பலப்படாது என அபயராம விகாராயின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்த போது தனியாருக்கும், வெளிநாடுகளுக்கும் வழங்கப்பட்ட சொத்துக்களை மீளப்பெறுவதாகவே உறுதியளிக்கப்பட்டது.
இன்று அந்த அரசாங்கம் பழைய பாதையில் பயணித்தால் வீதிகளுக்கு இறங்கி போராட வேண்டியேற்படும். ஆனால் தற்போதைய கோவிட் நிலைமைக்கு மத்தியில் அதனை செய்ய மாட்டோம்.
நாட்டை தனித்தனியே பிரித்து வெளிநாடுகளின் முதலீடுகளுக்காக வழங்குவதை நாம் அனுமதிக்க மாட்டோம். ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டினை எதிர்த்து எதிர்காலத்தில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவோம்.
நாட்டைப் பாதுகாப்பதற்கு கொண்டுவந்த அரசாங்கம் உரியவாறு பாதுகாப்பை அளிக்காவிட்டால் மக்களிடம் உள்ள நம்பிக்கையும் மறைந்துபோகும்.
சௌபாக்கிய திட்டம் என்று சொன்னார்கள். ஆனால் போகின்ற போக்கில் குடிக்கத் தண்ணீர் கூட மக்களுக்குக் கிடைக்காத நிலைமையே ஏற்படும் என தெரிவித்துள்ளார்.