புல் வெட்டிக்கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி மூன்று வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
புத்தளம் மாவட்டம், பள்ளம, சேருகெலே பிரதேசத்தில் தனது தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்த குழந்தை குறித்த ட்ரக்டர் இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இயந்திரத்தைச் செலுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,பள்ளம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்