இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் வழங்குவதற்கு அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர். அதற்கான உரிய தொழில்நுட்ப குழுவினர் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் சுகாதார சேவை உட்பட முன் வரிசை ஊழியர்களுக்காக பூஸ்டர் தடுப்பூசியான பைஸர் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த இலக்கை எட்டியவுடன் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயதிற்கு குறைவானவர்களுக்கும் அதன் பின்னர் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும் அதற்கான உரிய காலப்பகுதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஒரு நபர் தனது இரண்டாவது தடுப்பூசி பெற்று 6 மாதங்களின் பின்னரே பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.