மீகொட பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியரை தூக்கி தரையில் அடித்த இரண்டு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக் கவசம் அணியாத நபரிடம் அதனை அணியுமாறு கோரிய எரிபொருள் நிலைய ஊழியரை தூக்கி தரையில் அடித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
முகக் கவசம் அணியாமல் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு வந்த நபரை முகக் கவசம் அணியுமாறு ஆலோசனை வழங்கியமையினால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
மீகொட பொலிஸாரினால் நேற்று இரவு இந்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் பாதுகக்க கலகெதர சமனல மாவத்தை மற்றும் வட்டரெக்க பிரதேசத்தை சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இரண்டு நபர்களாகும்.
சம்பவத்திற்கு தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.