ரவை பயன்படுத்தி கேசரி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவல் வைத்து எளிய முறையில் பத்தே நிமிடத்தில் கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான அளவு
அவல் – 2 கப்
சர்க்கரை – 1 கப்
கேசரி பவுடர் – 2 சிட்டிகை
முந்திரி – 15
நெய் – 1/2 கப்
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
முக்கால் டம்ளர் தண்ணீரில் கேசரி பவுடரை கரைத்து, அதில் அவலை சேர்த்து வேக விடவும்.
அவல் வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும்.
கேசரி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்தால் கமகம அவல் கேசரி ரெடி.