ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 முன்பதிவு இந்தியாவில் இன்று துவங்குகிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 இந்திய முன்பதிவு இன்று (அக்டோபர் 8) மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. முன்பதிவு ஆப்பிள் இந்தியா வலைதளம் மற்றும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல் ஐபோன் 13 சீரிசுடன் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாட்ச் 41 எம்எம் மற்றும் 45 எம்எம் என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, தென் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் 50-க்கும் அதிக நாடுகளிலும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 முன்பதிவு துவங்கி உள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 விலை ரூ. 41,900 என துவங்குகிறது. முன்பதிவை
தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 விற்பனை அக்டோபர் 15 ஆம் தேதி துவங்குகிறது.