சந்தையில் சீனி மற்றும் அரிசி என்பவற்றின் விலை கட்டுப்பாடின்றி அதிகரிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் பதிவாகியுள்ளன.
சீனிக்காக கட்டுப்பாட்டு விலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மீண்டும் இவ்வாறு விலை அதிகரித்து காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் சீனி தொகை பதுக்கப்பட்டிருந்தமையினால் ஒரு கிலோகிராம் சீனியின் விலை 230 ரூபா வரை அதிகரித்திருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் நுகர்வோர் அதிகாரசபையினால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்ட போது குறித்த சீனி தொகை மீட்கப்பட்டதோடு அரசாங்கத்தினால் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டது.