போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக்கானின் மகன் ஆர்யனை வெளியே எடுப்பதற்கு ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக சாட்சி அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
செகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கைது செய்யப்பட்டார்.
நான்குமுறை ஜாமீன் எடுப்பதற்கு ஷாருக்கான் முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்ததால் ஷாருக் குடும்பம் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
குறித்த வழக்கில் தனியார் புலனாய்வு ஆய்வாளர் கே.பி.கோசவியும், அவருடைய உதவியாளர் பிரபாகர் செயிலும் சாட்சியாக சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது பிரபாகர் அளித்துள்ள பேட்டி ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர வைத்துள்ளது.
பிரபாகர் அளித்த பேட்டியில், தன்னிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 10 வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும், என்சிபி அதிகாரிகள் மற்றும் மேலும் சிலர் ஷாருக்கானிடம் ரூ25கோடி பேரம் பேசியதாகவும் கூறி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால் பிரபாகர் கொடுத்த பேட்டியை என்.சி.பி அதிகாரிகள் மறுத்துள்ளதோடு, விசாரணை அமைப்பின் பெயரைக் கெடுப்பதற்காக இந்த குற்றச்சாட்டு கூறப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அலுவலகத்தில் கண்காணிப்பு உள்ளதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் குறித்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.