வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி செட்டியார் மடம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று இரவு 7 மணி அளவில் இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் தெரியவருகையில்,
துணைவியிலிருந்து செட்டியார் மடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன், அராலியில் இருந்து சென்று செட்டியார் மடம் சந்தியால் திரும்பிய முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தினை தொடர்ந்து முச்சக்கர வண்டியின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் காயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.