உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அமெரிக்கா ஆய்வை மேற்கோள்காட்டி விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் 86.9% ஆக இருந்த ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் ஆறு மாதங்களுக்குப் பிறகு 43% ஆகக் குறைந்துள்ளது. 89 சதவீதம் ஆக இருந்த மொடர்னா தடுப்பூசியின் செயல்திறன் ஆறு மாதங்களுக்குப் பிறகு 58சதவீதம் ஆகக் குறைந்துள்ளது.
ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசி செயல்திறன் 86.4 சதவீதத்திலிருந்து இருந்து 13 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வைரஸுக்கு எதிரான மூன்று தடுப்பூசிகளின் செயல்திறன் 89 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக குறைந்துள்ளதாக ஆராய்ச்சி அறிக்கையில் தெரியவந்துள்ளது.