60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (17) முதல் ஆரம்பமாகவுள்ளது.
அநுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல, தென் மாகாணங்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.
இரண்டாவது தடுப்பூசி ஏற்றி 3 மாதங்கள் முழுமை பெற்றவர்களுக்கே இவ்வாறு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
முதலாவது மற்றும் இரண்டாவதாக எவ்வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும், மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.