பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய நாளுக்கான வானிலை பற்றிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும்,
வடக்கு, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் உண்டு.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகலில் அல்லது இரவில் 50 மில்லிமீற்றர் அளவிலான மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்று மற்றும் இடி, மின்னல் தாக்கம் குறித்து மக்கள் போதிய முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அத்துடன் வட அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு திசையை அண்டி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
நவம்பர் 18ஆம் திகதியளவில் தென் ஆந்திரப் பிரதேசத்தையும் அண்மையாகவுள்ள வட தமிழ்நாடு கரையையும் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாகவும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.