யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று(18) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையிலேயே உயிரிழந்த வயோதிபருக்குக் கோவிட் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை வசித்து வந்த 74 வயதுடைய எம்.சிவசுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.