உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி நினைவுகூரப்படும் நிலையில் அதனை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று வவுனியா பொது வைத்தியசாலையின் மாவட்ட பாலியல் நோய்த்தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா பொது வைத்தியசாலையிலிருந்து ஆரம்பமான இந்த ஊர்வலம் குருமன்காட்டுசந்தி ஊடாக, வைரவபுளியங்குளம் சென்று, வவுனியா நகரம் ஊடாக மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது.
இவ்விழிப்புணர்வு ஊர்வலத்தில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் காலை10 மணிக்கு எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றும் நடைபெற்றிருந்தது.
குறித்த செயலமர்வில் வைத்தியசாலை பணிப்பாளர் இ.ராகுலன், விசேட வைத்திய நிபுணர் இளங்குமரன், மற்றும் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையில் இம்முறை சமத்துவமின்மையை ஒழிப்போம், எயிட்ஸை ஒழிப்போம், பெருந்தொற்றை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.