இலங்கையில் எரிபொருள் விற்பனையில் 30 வீத வரி அறிவிடப்படுவதாக எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, லங்கா டீசல் லீற்றர் ஒன்றுக்காக பாவனையாளர் ஒருவரிடம் இருந்து 14 ரூபா வரி அறிவிடப்படுகிறது.
சுப்பர் லீற்றர் லீற்றர் ஒன்றுக்கு 38 ரூபா வரியும், 92 ஒக்டெய்ன் பெற்றோலுக்கு 42 ரூபாவும், ஒக்டெய்ன் 95 க்கு 65 ரூபாவும் வரியாக அறிவிடப்படுகிறது.
இந்தநிலையில் எரிபொருட்களின் மீது இந்தளவு வரி அறிவிடப்படுகின்றபோதும், எரிபொருட்கள் விநியோகத்தில் பாரிய பிரச்சனை ஏற்படப்போவதை ஏன் தடுக்கமுடியாதுள்ளது என்றும் விதானகே கேள்வி எழுப்பினார்.