கடந்த சில நாட்களாக எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதாக தவறான ஒரு செய்தி பரவுவதை நான் அமைதியாக அவதானித்துக்கொண்டிருந்தேன். நான் சவால் விடுகின்றேன். முடிந்தால் எனக்கு காட்டுங்கள் எரிவாயு சிலிண்டர் எங்கு வெடித்தது?எங்குமே எரிவாயு சிலிண்டர் வெடிக்கவில்லை, எரிவாயு அடுப்பு தான் வெடிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது சரியாக வயிற்று வலியாக இருக்கும் போது கால் வலி பற்றி பேசுவதை போன்ற ஒரு செயல். ஆகவே நான் மிகத்தெளிவாக ஞாபகமூட்ட விரும்புகின்றேன். எரிவாயு கலவையில் பிரச்சினை இல்லையென மீண்டும் மீண்டும் கூறுகின்றார்கள்.எரிவாயு சிலிண்டரில் பிரச்சினை இல்லை என கூறுகின்றார்கள்.