மட்டக்களப்பு, ஜெயந்திபுரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பிரதேசத்திலுள்ள சேர்ந்த பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்ததுடன் அப்பேண்ணுக்கு , தொடர்ந்து தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து இருவரது உறவினருக்கிடையே இரு தடவைகள் கைகலப்பு இடம்பெற்று பொலிஸ் நிலையம்வரை சென்றுள்ளது.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு 7 மணியளவில் ஜெயந்திபுரத்தில் வீதியில் வைத்து குறித்த பெண்ணின் உறவினர் மீது இளைஞனின் குழுவினர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலை மேற்கொண்ட குழுவினரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.