கொடிய கொரோனா தொற்றினால் மக்கள் போராடி கொண்டிருக்கும் வேளையில் மறுபுறம் தங்கம், வெள்ளி என அதன் விலை தொடர்ந்து ஏறி கொண்டே செல்கின்றமை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தங்கத்தை இனி வாங்குவது கஷ்டம் போல அதன் விலையும் ஏறிக்கொண்டே செல்கிறது என பல்லரும் கவலையில் ஆழ்ந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வரும் தங்கத்தின் விலை , சாமானியர்கள் மத்தியில் சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் கடந்த 3 ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,545 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை 4,472 ஆக விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,776-க்கு விற்பனையாகிறது. அதன்படி இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, ரூ.4,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 64,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து ரூ.64,300-க்கு விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.