பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலைக்கு அருகில் அம்பியூலன்ஸ் வண்டி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இனந்தெரியாத நான்கு நபர்கள் அம்பியூலன்ஸ் வண்டியின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் சம்பவம் குறித்து பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.