கிரிக்கெட் வரலாற்றிலேயே ஐபிஎல் தொடருக்கு தான் மவுசு அதிகமாக மக்களிடையே இருந்துவருகிறது. வருடா வருடம் நடக்கும் இந்த ஐபிஎல் தொடர் 14 சீசன்களை கடந்துள்ள நிலையில், 15 வது சீசன் மார்ச் 26-ம் தேதி தொடங்க இருக்கிறது.
இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், ஐபிஎல் பல கோடிகளை சம்பாரித்தாலும், அதில் விளையாடும் சில வீரர்கள் மட்டுமே தான் கோடியில் புரளுக்கிறார்கள்.
அப்படி பார்த்தால், தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, கிறிஸ்கெய்ல், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, வெளிநாட்டு வீரர்கள் என பலரும் கோடியில் புரளுபவர்கள் தான்.
அவர்கள் லிஸ்டில் கேல்.எல். ராகுல் 17 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்த செய்யப்பட்டார்.
வெறும் ஒரு சீசனில் 17 கோடி என்றால் ஆரம்ப முதல் இப்போது வரை இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் எவ்வளவு கோடிகளை சம்பாதித்து இருப்பார்கள் என்று நினைத்து பாருங்கள். அப்படி பட்ட வீரர்களின் பட்டியலை பற்றி தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.
முத்து படத்தில் நடித்த நடிகையா இது? தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
தோனி
ஐபிஎல் அணியில் 2008 ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இவர் தலைமையில் 4 வரை கோப்பைகளை வென்றுள்ளது.
அபராமான இவரின் பேட்டிங், கீப்பிங், கேப்டன் ஷிப் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
2008-ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் 6 கோடி சம்பளத்தை வாங்கி சாதனை படைத்த அவர் கடந்த 4 வருடங்களாக தலா 15 கோடிகளை சம்பளமாக பெற்று வந்தார்.
இந்த நிலையில், 40 வயதை கடந்து விட்டதால் இந்த வருடம் முதல் முறையாக சம்பளத்தை 12 கோடியாக குறைத்துக் கொண்டுள்ள எம்எஸ் தோனி ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை 1,64,84,00,000 ரூபாய் அதாவது 164 கோடிகளை சம்பளமாக மட்டுமே பெற்றுள்ளார்.
ரோகித் சர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர், கேப்டன் என்ற மிகப்பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் தான் ரோகித் சர்மா.
இதுவரை அந்த அணிக்காக ஆடி 5 கோப்பைகளை வென்றுகொடுத்துள்ளார். இவரின் சாதனை தற்போது இந்திய அணிக்கும் பக்க பலமாக இருந்து, மூன்று வடிவலான போட்டிகளிலும் கேப்டனாக உள்ளார்.
16 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் விளையாட உள்ள ரோகித் சர்மா இதுநாள் வரை 1,62,60,000 ரூபாய் அதாவது 162 கோடிகளை சம்பளமாக பெற்று இந்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
விராட் கோலி
இந்திய அணியில் ஒரு சாதாரண பையனாக நுழைந்த இவர், இவரின் ஆட்டத்தை கண்டு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரே வாயடைக்க வைத்தவர்.
விராட் கோலி என்றாலே சச்சினுக்கு நிகரான ரசிகர்கள் படையே கொண்டுள்ளார். இவரும் 2008-ம் ஆண்டு முதல் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஆனால், இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்ல முடியவில்லை. ஆனால் ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை தக்க வைத்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்தே பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் கோலி, இந்த வருடமும் அந்த அணிக்காக 15 கோடி சம்பளத்தில் விளையாட உள்ளார்.
மேலும், கடந்த 4 வருடங்களாக தலா 17 கோடி சம்பளத்தில் விளையாடி வந்த அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சம்பளம் பெற்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
தற்போது அதிலிருந்து 2 கோடிகளை குறைத்துக்கொண்டுள்ள அவர் 1,58,20,00,000 ரூபாய் அதாவது 158 கோடிக்கும் மேல் இதுநாள் வரை சம்பளமாக வாங்கி இந்த பட்டியலில் 3-ம் இடம் பிடிக்கிறார்.
சுரேஷ் ரெய்னா
ஒரு காலக்கட்டத்தில் ஐபிஎல் என்றால் அது சுரேஷ் ரெய்னா அடி தான் என சென்னை அணி கொண்டாடி வந்த ஒரு வீரர். பேட்டிங் மட்டுமின்றி பீல்டிங், பவுலிங்கிலும் கூட சில சமயம் அசத்தி இருக்கிறார்.
சென்னை அணியில் சின்ன தல என அன்போடு அழைத்த இவரை, எந்த அணியும் ஏலத்தில் எடுக்காமல் போன மிகப்பெரிய ஏமாற்றம் தான்.
தற்போது, வர்ணையாளராக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பணியை தொடங்க இருக்கிறார். சுரேஷ் ரெய்னா 2008 – 2021 வரை 1,10,74,00,000 ரூபாய் அதாவது 110 கோடிகளை சம்பளமாக பெற்று இந்தப் பட்டியலில் 4வது இடம் பிடிக்கிறார்.
ஏபிடி வில்லியர்ஸ்
தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர் என்றால் அது ஏபிடி தான். இவரை பிடிக்காத வீரர்களும் இல்லை. ரசிகர்களும் இல்லை.
360 என அன்போடு பாரட்டும் இவரை அனைத்து பக்கங்களிலும் சிக்ஸரை விளாசக்கூடிய திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்.
இவரை பற்றி ஒரு நீண்ட கட்டூரையே எழுதலாம் அந்த அளவுக்கு பெங்களூர் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆவார்.
கடந்த 2008 முதல் பெங்களூர் அணிக்காக விளையாடு இவர், இந்த ஐபிஎல்யுடன் ஓய்வு பெற்றுள்ளார்.
2008 – 2021 வரை அவர் பங்கேற்ற போட்டிகளின் வாயிலாக 1,02,51,65,000 ரூபாய் அதாவது 100 கோடிக்கும் மேலான பணத்தை சம்பாதித்துள்ளார்.