அரிசியைக் காட்டிலும் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து அதிகம்கொண்ட தானியம் கம்பு.
அதனை நீரிழிவு நோயாளிகளும் விரும்பி சாப்பிடும் இடியப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கம்பு மாவு – 1 கப்
தேங்காய்த்துருவல்
வெல்லத் துருவல் – தலா 1 கப்
ஏலப்பொடி – சிறிது, நெய், உப்பு- தேவைக்கு
செய்முறை
கம்பு மாவில் உப்பு, தண்ணீர் தெளித்து பிசறி கொள்ளவும்.
இடியாப்ப அச்சில் கம்பு மாவை போட்டு இடியாப்பமாக பிழிந்து 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
வெந்த கம்பு மாவில் தேங்காய் துருவல், வெல்லத்துருவல், நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.
சத்து நிறைந்த கம்பு இடியாப்பம் ரெடி. வெல்லம் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் வெந்த இடியாப்பத்துடன் சட்னி, குருமா சேர்த்து சாப்பிடலாம்.