இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்பு அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு நபராகவும் பல்வேறு அரசியல் வியூகங்களை பூகோல அரசியலுக்கேற்ப மாற்றியமைக்கும் திறன் படைத்தவராகவும் அரசியல் தத்துவாசிரியராக அரசியல் ஆலோசகராக விளங்கும் நபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) ஆவார்.
iஇலங்கையின் 26வது பிரதமராகவும் 6வது தடவையாக பிரதமர் பதவியில் அமரும் நபராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விளங்குகின்றார்.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோனா தொற்றை அடுத்து பல்வேறு நாடுகளின் பொருளாதார நிலைமையும் திண்டாடத் தொடங்கியது.
இந்த நிலையில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுள் ஒன்றாக விளங்கிய இலங்கையையும் கொரோனா தொற்று விட்டுவைக்கவில்லை.
கொரோனா தொற்றின் கோரதாண்டவம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பலத்த எதிர்வினையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏற்றுமதி வருவாய் இழப்பு மற்றும் சுற்றுலாத்துறை வீழ்ச்சி போன்ற காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் சரிவடைய தொடங்கியது.
இவ்வாறாக ஆரம்பித்த நெருக்கடி மெல்ல மெல்ல தீவிரமடைய நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் பலவும் இறக்குமதி செய்யவேண்டிய நிலையுடன் டொலரின் கையிருப்பும் குறைவடைய தொடங்கியது.
அதேவேளை அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வரிச்சலுகைகளால் அரச வருமானங்களிலும் பாதிப்பு ஏற்படத் தொடங்கின. அதேவேளை இரசாயன உரத் தடையினை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பமாக தொடங்கின.
அதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு எரிவாயு எருக்கடி அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் வீதியில் இறங்கி அராசங்கத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் நாளுக்கு நாள் அதன் ஆதரவும் பெருக தொடங்கின.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவிவிலகுமாறு கோரி நாடளாவிய ரீதியிலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களாலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சிலதினங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.
இந்நிலையில் புதிய பிரதமர் யார் என்பது தொடர்பில் பல்வேறு கட்சிகளிடையேயும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் இறுதியாக நேற்றையதினம் மாலை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) முன்னிலையில் இலங்கையின் 26வது பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.
பதவியேற்றதை தொடர்ந்து அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தது.
இந்நிலையில் பிரதமர் தலைமையில் விரைவில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவை பல்வேறு கட்சித்தலைவர்களும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதேவேளை பிரதான எதிர்கட்சியான சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணிலுடன் சங்கமமாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறாக அரசியல் களங்களில் தவிர்க்க முடியாத பாத்திரமாக விளஙங்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆரம்பகால சாதனைகளாக,
க.பொ.த (உ/த) பரீட்சையில் இலங்கையில் 02ம் இடம்.
க.பொ.த (சா/த) பரீட்சையில் இலங்கையில் 07வது இடம்
கொழும்பு ரோயல் கல்லூரி விவாதக் குழு மற்றும் நாடகக் குழுவின் தலைவர் .
இலங்கை சட்டக் கல்லூரியின் முதலாவது பரிஸ்டர் பட்டம் பெற்றவர்.
லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான முதுகலைப்பட்டம் வென்றவர்.
15 வயதில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய உலகின் ஒரே மனிதர்.
ஜப்பான் பாராளுமன்றத்தில் ஜப்பான் மொழியில் உரையாற்றிய உலகின் ஒரே ஒரு வெளிநாட்டு அரச தலைவர்.
இலங்கையின் வயது குறைந்த முதலாவது அமைச்சர்.
உலகின் கல்வியறிவுள்ள அமைச்சர்களுக்காக வழங்கப்படும் “ பிலென் டி ஒர் “ விருதை இரண்டு தடவைகள் பெற்ற ஒரேயொரு இலங்கை அரசியல்வாதி.
1989 இல் “ நொபெல் “ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது இலங்கையர்.
இலங்கைக்கு இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியவர்.
இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தியவர்.
இளைஞர் சேவைகள் கழத்த ஆரம்பித்தவர்.
அறநெறிக் கல்விக்கு வித்திட்டவர்
கல்வியற் கல்லூரிகளை ஆரம்பித்தவர் ( college of education )
இலங்கையில் அதிக தடவைகள் பிரதமராக இருந்தவர்
போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் நியமனம் வழங்கலை ஆரம்பித்தவர்
ஒரே தடவையில் அரச ஊதியம் 10000/-ரூபாவால் அதிகரித்தவர். இவ்வாறாக பல்வேறு சாதனைகளுடன் கடந்த ஒரு வருடமாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து நாட்டின் நெருக்கடியான நிலையில் 26வது பிரதமராக பதவியேற்ற பெருமை ரணிலையே சாரும்.