சீரற்ற வானிலை காரணமாக எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் முழுமையாக தடைப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் பொது மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே இன்றைய தினம் எரிவாயு தரையிறக்கும் பணி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சீரற்ற வானிலை காரணமாக எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளது.
ஆகையால் மறு அறிவிப்பு வரை மக்கள் காத்திருக்க வேண்டும் என்பதுடன் தேவையில்லாமல் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய நிலைமைக்கு மத்தியில், பொதுமக்கள் ஒரு கொள்கலன் எரிவாயுவை மாத்திரம் பெற்றுக் கொள்ளுமாறும் அந்த நிறுவனம் கோரியுள்ளது.