அமெரிக்காவில் குரங்கு அம்மை கண்டறிவதற்கான பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த நோயின் தாக்கம் அதிகரிக்ககூடிய சாத்தியம் நிலவுவதாக அமெரிக்கா வெள்ளை மாளிகை வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டினுள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரையில் 2,900 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அங்கு குரங்கு அம்மைக்கான பரிசோதனைகள் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த எண்ணிக்கை குறைவானது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
முன்னதாக வாரந்தம் 6000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் குறித்த எண்ணிக்கை தற்போது 80,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உலகளாவிய ரீதியாக 15,000இற்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.