தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இந்த ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அடக்குமுறையை நிறுத்து! வலுப்பெறும் கோஷங்கள்
அவசரகாலச் சட்டத்தை சுருட்டிக்கொள், போராட்டத்திற்கு எதிரான அடக்குமுறையை நிறுத்து என்னும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மிக அதிகளவான போராட்டக்காரர்கள் இதில் இணைந்து கொண்டுள்ளனர்.
வெகுசன அமைப்புக்களின் கூட்டமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பாரிய போராட்டமாக இதனை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.