ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுக்கும், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது சர்வக்கட்சி அரசாங்கம் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என மொட்டு கட்சி தரப்பில் பிரதமரிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி கோட்பாட்டுக்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகியதாகவும் எனவே, இந்த இலக்கை அடைய தமது கட்சி முழு ஒத்துழைப்பை வழங்கும் என மொட்டு கட்சி எம்.பியொருவர் தெரிவித்தார்.
அதேவேளை எப்பொழுதும் எம்.பிக்கள், பிரதமரை தேடிச்சென்றே பேச்சு நடத்துவர். ஆனால் , எம்பிக்களை தேடிச்சென்று பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துரையாடியுள்ள சம்பவம் இதுவே முதல் முறை என கூறப்படுகின்றது.