கண்டி கெட்டம்பே மைதானத்தில் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மதுபோதையில் சிலர் கலந்து கொள்ள முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குழுவினரை மைதானத்துக்குள் நுழைய விடாமல் தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் இருவரை தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களினால் பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.