அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த வர்த்தகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச் சம்பவம் ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம் பெற்றுள்ளது.
அதாவது நிர்ணய விலையை மீறி அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கினை விசாரணை செய்த அவிசாவளை நீதவான் நீதிமன்றம் 1,020,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.