நாடு முழுவதும் உள்ள அனைத்து மசாஜ் மையங்களையும் (ஸ்பா) ஒழுங்குபடுத்துவதற்கும், நடத்துவதற்கும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த பொது நிர்வாக அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில், ஏற்கனவே ஒழுங்குமுறை செயல்முறையை பொது நிர்வாக அமைச்சு தயாரிக்கத் தொடங்கியுள்ளது.
மசாஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்துதல், வருடாந்த வரி அறவிடுதல், அந்த நிலையங்களிலிருந்து பதிவுக் கட்டணம் அறவிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு தமது சங்கத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக சிலோன் ஸ்பா சங்கத்தின் தலைவர் பிரசன்ன முனசிங்க தெரிவித்தார்.