யாழ்ப்பாணத்தில் ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெறாத சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று (24.03.2024) இடம்பெற்றுள்ளது.
அராலி மத்தியைச் சேர்ந்த கிருபாகரன் சுலக்சன் என்ற 5 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
மரண விசாரணை
உயிரிழந்த சிறுவன் கடந்த ஒரு வார காலமாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று(24) அதிகாலை சிறுவன் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டமையினால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் ஈடுபட்டுள்ளதோடு, இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.