தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்கம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞர் ஒருவர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
லண்டனில் இருந்து இலங்கைக்கு வருகைத் தந்த குறித்த இளைஞன், மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளார்.
மேலும் குறித்த இளைஞன் கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது மனித உரிமை ஆணைக்குழுவில், கைது செய்யப்பட்ட இளைஞனின் தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து கடந்த மாதம் 7 ஆம் திகதி நாட்டுக்கு வருகைத் தந்த குறித்த இளைஞனிடம் வவுனியா, வெடுக்குநாரிமலை ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.