கனடாவின் தென்மேற்கு ஒன்றாரியோ பகதியில் ஆபத்தான வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான வெப்பநிலை மற்றும் ஈரப்பதனுடன் கூடிய வெப்பநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் இந்த ஆபத்தான வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லண்டன், ரொறன்ரோ, நயகரா, ஓவன் சவுன்ட் மற்றும் கிங்ஸ்டன் ஆகிய பகுதிகளில் இவ்வாறு கடுமையான வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சராசரியாக 35 பாகை செல்சியஸ் அளவில் வெபப்நிலை நீடிக்கும் எனவும், ஈரப்பதன் நிலைமையுடன் பார்க்கும் போது சுமார் 40 முதல் 45 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிப்பது போன்று உணர நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ரொறன்ரோவில் இன்று இடிப்புயல் நிலைமை நீடிக்கக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.