யாழ்ப்பாணம் (Jaffna) – பூநகரி (Pooneryn) பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று (11) இடம் பெற்றுள்ளது.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துகுள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.