பண மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் (Criminal Investigation Department) கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் இருந்து வருகைதந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
52 வயதுடைய குறித்த சந்தேகநபர் பிரிமிட் வர்த்தகம் ஊடாக சுமார் 1,800 மில்லியன் ரூபா பண மோசடியை செய்துவிட்டு, ஒரு வருடத்திற்கு முன்னதாக நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபரை வரவேற்பதற்காக விமான நிலையம் சென்ற அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு பிரிவினரால் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) – கொட்டடி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் ஹெரோயினுடன் 22 வயதுடைய இளைஞன் ஒருவரே 120 மில்லி கிராம் ஹெரோயினுடன் நேற்றைய தினம் (7.11.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.