புத்தளம் – வனாத்தவில்லுவ வீதியில் அம்பியூலன்ஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த அம்பியூலன்ஸ் சாரதி புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிலாபம் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (13-01-2025) மாலை புத்தளம் – வனாத்தவில்லுவ வீதியில் 10ஆவது தூண் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வனாத்தவில்லுவ வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவ சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையிலிருந்து மருத்துவர் ஒருவரை அழைத்துச் சென்றுவிட்டு, மீண்டும் சிகிச்சை முடிந்து மருத்துவரை புத்தளம் மருத்துவமனையில் விட்டுவிட்டு வனாத்தவில்லுவ மருத்துவமனைக்கு திருப்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் வனாத்தவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.