பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா சீரியலிலிருந்து விலகவில்லை… நானே நடிக்க போகிறேன்… என்று கூறியுள்ளார்.
பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றதோடு, டிஆர்பியிலும் டாப் இடத்தினைப் பிடித்துள்ளது.
இந்த தொடரில் வில்லியாக வெண்பா நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. ஆம் பரீனாவின் எதார்த்தமான நடிப்பினை அவதானித்த ரசிகைகள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.
அந்த அளவிற்கு தனது தத்ரூப நடிப்பினை கொடுத்துவரும் இவர், கர்ப்பமாக இருப்பதால் தொடர்ந்து நடிப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு பரினா, ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கின்றார்.
ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள வெண்பா, தனது கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பேன் என்று காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதில் எனக்கு நடிப்பதற்கு ஒரு சிரமமும் இல்லை. முடிந்தவரை நானே தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
View this post on Instagram