பனைசார் உற்பத்தி பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், பனைசார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி நிகழ்வும் இன்றைய தினம் (19) காரைநகர் பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பனைசார் உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாக பனைசார் உற்பத்தி பயிற்சி நெறியானது பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது. அப் பயிற்சி நெறியின் நிறைவில் இந் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது முதல் மூன்று இடங்களில் உள்ள உற்பத்தி பொருட்களை செய்த மூவர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.