டெலிகிராம் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் சமூக வலைத்தளமான டெலிகிராம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிய அப்டேட் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது டெலிகிராம் செயலியில் புதிய பிரீமியம் பிளான் ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.
கட்டணம் வசூலிக்கப்படும்
பிரீமியம் பிளான் போன்ற பிரத்தியேக வசதிகளை பயனர்கள் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாகவும், அதே நேரத்தில் தற்போது டெலிகிராம்மை பயன்படுத்தி வருபவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாத பழைய நடைமுறையே தொடரும் என பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய பிரீமியம் பிளான் இந்த மாதம் அறிமுகவுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.