ஐசிசி வெளிட்டுள்ள தரவரிசை பட்டியலில், புஜாரா, ரஹானே சரிவை சந்தித்துள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியானது. அதில், கோஹ்லி 928 புள்ளிகளுடன் முதலிட்டத்தை தக்கவைத்துள்ளார். அவுஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.
மற்றொரு அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் 827 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் 814 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 5வது இடத்திற்கு வந்துள்ளார்.
இந்திய வீரர்கள் புஜாரா 6வது இடத்திற்கும், ரஹானே 9வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், அவுஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து பந்து வீச்சாளர் நீல் வாக்னர் 852 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாசன் ஹோல்டர் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்திய வீரர்களான பும்ரா 6வது இடத்திலும், அஸ்வின் 9வது இடத்திலும், முகமது ஷமி 10-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.