உகாண்டாவில் இஸ்லாம் மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய மகளை தந்தை எரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உகாண்டாவை சேர்ந்தவர் Sheikh Hussein Byaruhanga. ஆன்மிக ஆசிரியரான இவர், கடந்த 4-ஆம் திகதி 24 வயது மகளான Rahema Kyomuhendo மீது எரிபொருளுக்கு பயன்படுத்தப்படும் பொருளை ஊற்றி அவரை எரிக்க முயன்றார்.
இதனால் அவர் படுகாயங்களுடன் Mbale பிராந்தியத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதில், அவரது கால், வயிறு, கழுத்து மற்றும் அவளின் கீழ் முது பகுதி போன்ற இடங்களில் தீக்காயம் இருந்துள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை மூலம் குணமடைந்து வருகிறார்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Rahema Kyomuhendo இஸ்லாம் மத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளார்.
அதைப் பற்றி பேசியுள்ளார். இதனால் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் தந்தை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது
மேலும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களின் இது சமீபத்திய ஒன்று எனவும், கடந்த 2014-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகையில் 84 சதவீதத்திற்க்கும் அதிகமானோர் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் வெறும் 14 சதவீதம் மட்டுமே என்று கூறப்படுகிறது.