சர்வதேச மாடல் அழகியான கிம் கர்தாஷியன் இந்து மதத்தின் புனித முத்திரையான ஓம் முத்திரையை கொச்சைப்படுத்தியதாக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
காதில் இந்து மத முத்திரையான வடமொழி ஓம் முத்திரை டிசைனில் கம்மல் அணிந்து சமீபத்தில் போட்டோக்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு கிம் கர்தாஷியன் சூப்பர்ஸ்டார் எனும் ஆபாச வீடியோ மூலம் உலகம் முழுவதும் பாப்புலரானார் இவர். தற்போது 40 வயதாகும் நிலையிலும், தொடர்ந்து பிகினி உடைகளிலும் அரை நிர்வாண போட்டோக்களையும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், லேட்டஸ்ட்டாக காதில் ‘ஓம்’ முத்திரை பதித்த கம்மலை அணிந்து கொண்டு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்க, அதனை பார்த்த இந்தியர்கள் நடிகை கிம் கர்தாஷியனுக்கு எதிராக கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.