பிக்பாஸ் ஜோடிகள் சூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து ஊரடங்கு விதிக்கப்பட்டது. சீரியல் மற்றும் சின்னத்திரை சூட்டிங் நிறுத்தப்பட்டன.
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஜீத், கேப்ரியல்லா, சென்றாயன் உள்ளிட்டோரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டனர்.
இதனால், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.
காமெடி, கலாட்டாவுக்கு பஞ்சமில்லாமல் வித்தியாசமான கான்செப்ட் மற்றும் நடன ரவுண்டுகள் இதில் இடம்பெற்று வருகிறது. ஏற்கனவே, மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தில் இருக்கும் மக்களுக்கு இந்த நிகழ்ச்சி நிச்சயம் விருந்தாக அமையும்.
ஏற்கனவே ரசிகர்களாக இருந்தவர்களுக்கு பிக்பாஸ் ஜோடிகள் சூட்டிங் தொடங்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டவுடன் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.
ரம்யா கிருஷ்ணனின் டிவிட்டர் பக்கத்தில், வெல் கம் பேக் மேடம் என கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், காமெடியிலும் கலக்குகிறீர்கள் என கூறியுள்ளனர்.
திரைப்படத்தில் மட்டுமல்ல நடுவராகவும் சிறப்பாக செயல்படுகிறீர்கள் எனவும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
Back to #bbjodigal set…shoot going on with all safety protocols being followed #staysafe #wearamask @vijaytelevision pic.twitter.com/bxytTQ1RbG
— Ramya Krishnan (@meramyakrishnan) June 15, 2021