அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 80 சதவீதமான ஆசிரியர்களுக்கு தற்போது முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.