இலங்கையில் உயர்ந்துள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலைகளுக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான உணவுப் பொருட்களின் விலைகளை இம்மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, புதிய விலை திருத்தத்தின்படி, நாடாளுமன்ற சராசரி ஊழியர் ஒருவரின் (சராசரி உணவகம்) மாதாந்தக் கட்டணம் 200 ரூபாவிலிருந்து 400 ரூபாவாகவும், பொலிஸ் உத்தியோகத்தின் உணவுக்கான கட்டணம் 25 ரூபாவிலிருந்து 50 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர் ஒருவரின் உணவுக்காக அறவிடப்படும் 70 ரூபா தொகை 100 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவு விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவின் விலை நாடாளுமன்றக் குழுவின் முன் தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற பேச்சாளர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்தார்.