இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துமாறு இந்திய மீனவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கச்சத்தீவு மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் ஏற்பாட்டில் தமிழக மற்றும் பாண்டிச்சேரி மீனவர்கள் புதுடெல்லியில் அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தபோதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்துமாறு அமைச்சரிடம் இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு அமைய, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்துவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளதாக மீனவ சங்க தலைவரான சேனாதிபதி சின்னத்தம்பி தெரிவித்துள்ளார்.